செய்திகள் இந்தியா
முஸ்லிம்கள் குறித்து நீதிபதி சர்ச்சை பேச்சு: விவரம் கேட்டது உச்சநீதிமன்றம்
புது டெல்லி:
முஸ்லிம்கள் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சர்ச்சைகுரிய வகையில் பேசியது குறித்து உச்சநீதிமன்றம் விவரம் கேட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற நீதிபதி சேகர்குமார் யாதவ், நமது நாடு ஹிந்துஸ்தான் என்று கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த நாடு பெரும்பான்மை சமூகத்தின் விருப்பப்படிதான் செயல்படும். இதுவே சட்டம். பெரும்பான்மை சமூகத்தின் நல்வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் எது பயனளிக்கிறதோ, அது மட்டுமே ஏற்கப்படும்.
வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் பெண்கள் தெய்வங்களாக போற்றப்பட்டுள்ளனர். அப்படி இருக்கும்போது 4 பெண்களைத் திருமணம் செய்யவும், முத்தலாக், நிக்கா ஹலாலா முறைகளை கடைப்பிடிக்கவும் உரிமை கோர முடியாது என்றார்.
அவரது பேச்சு அரசமைப்புச் சட்டம் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல் என்று எம்.பி.க்கள், வழக்குரைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக குழு அமைத்து துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு பிரபல மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கடிதம் எழுதினார்.
இதையடுத்து, நீதிபதி சேகர் குமாரின் பேச்சு தொடர்பான விவரங்களை அலாகாபாத் உயர்நீதிமன்றத்திடம் உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 14, 2024, 8:37 pm
இந்தியாவுக்கு நாளை வருகிறார் இலங்கை அதிபர்
December 14, 2024, 8:33 pm
அரசமைப்புச் சட்டம் சங் பரிவாரின் புத்தகமல்ல: மக்களவையில் பிரியங்கா அதிரடி கன்னிப்பேச்சு
December 13, 2024, 5:04 pm
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
December 13, 2024, 5:00 pm
பள்ளிவாசல்களில் நில ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை
December 11, 2024, 4:25 pm
இந்தியா கூட்டணிக்கு மம்தா தலைவராக பெருகும் ஆதரவு
December 11, 2024, 4:08 pm
குவைத் வங்கியில் ரூ.700 கோடி மோசடி: 1,400 கேரளத்தினர் மீது வழக்கு
December 10, 2024, 5:31 pm
விஎச்பி அமைப்பு நிகழ்ச்சியில் நீதிபதி பங்கேற்று சர்ச்சை உரை
December 10, 2024, 5:28 pm