செய்திகள் இந்தியா
விஎச்பி அமைப்பு நிகழ்ச்சியில் நீதிபதி பங்கேற்று சர்ச்சை உரை
புது டெல்லி:
பெரும்பான்மை சமுகத்தின் விருப்பபடியே இந்திய செயல்படும் என்று விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ்ஸின் ஒரு பிரிவாக இருக்கும் விஎச்பி, அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க கரசேவை நடத்தியது. விஎச்பியின் சட்டப்பிரிவு சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்ற நூலக அரங்கில் நடைபெற்ற பயிலரங்கத்தில் நீதிபதி எஸ்.கே. யாதவ் கலந்து கொண்டு பொது சிவில் சட்டம்: அரசியலமைப்பு சட்ட அவசியம், வஃக்பு வாரிய சட்டம், மத மாற்றம் தடுப்பு நடவடிக்கைகளும் ஆகிய தலைப்புகளில் பேசினார்.
இது ஒரு இந்துஸ்தான் நாடு என்பதைக் கூற எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இங்கு பெரும்பான்மையினர் வாழ்பவர்களுக்கு ஏற்றவகையில் இந்நாடு செயல்படுகிறது. இதுதான் சட்டம்.
இதை ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சொல்வதாக யாரும் கருதக் கூடாது. சட்டம் என்பது மெஜாரிட்டியை பொறுத்தே அமையும். இதையே ஒரு சமூகம் அல்லது குடும்பத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதிலும் மெஜாரிட்டியின் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பதே ஏற்கப்படுகிறது என்றார் நீதிபதி எஸ்.கே.யாதவ்.
கடந்த 2021-ல் பசு குண்டர்களுக்கு ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதி சேகர் குமார் யாதவ், இந்திய கலாச்சாரத்தின் அங்கமான பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதேபோல்,ராமர், கிருஷ்ணர், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை இந்திய பாரம்பரியத்தின் அங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி சேகர் யாதவ் கருத்து கூறியிருந்தார். நீதிபதி சேகர் யாதவ், தினேஷ் பாதக் ஆகியோர் விஎச்பி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 14, 2024, 8:37 pm
இந்தியாவுக்கு நாளை வருகிறார் இலங்கை அதிபர்
December 14, 2024, 8:33 pm
அரசமைப்புச் சட்டம் சங் பரிவாரின் புத்தகமல்ல: மக்களவையில் பிரியங்கா அதிரடி கன்னிப்பேச்சு
December 13, 2024, 5:04 pm
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
December 13, 2024, 5:00 pm
பள்ளிவாசல்களில் நில ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை
December 11, 2024, 4:48 pm
முஸ்லிம்கள் குறித்து நீதிபதி சர்ச்சை பேச்சு: விவரம் கேட்டது உச்சநீதிமன்றம்
December 11, 2024, 4:25 pm
இந்தியா கூட்டணிக்கு மம்தா தலைவராக பெருகும் ஆதரவு
December 11, 2024, 4:08 pm
குவைத் வங்கியில் ரூ.700 கோடி மோசடி: 1,400 கேரளத்தினர் மீது வழக்கு
December 10, 2024, 5:28 pm