நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா கூட்டணிக்கு மம்தா தலைவராக பெருகும் ஆதரவு

புது டெல்லி:

இந்தியா  கூட்டணிக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமை வகிக்க வேண்டும் என்ற கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்தக் கூட்டணிக்கு தற்போது காங்கிரஸ் தலைமை வகித்து வருகிறது. இந்நிலையில், மம்தா தலைமையேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், லாலு பிரசாத் யாதவ்,அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே,  கூட்டணி குறித்து கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset