நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

புது டெல்லி:

ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த மசோதாவுக்கு 32 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன; 15 கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

அதில் தேசிய கட்சிகளில் பாஜக, தேசிய மக்கள் கட்சி ஆதரித்தன. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன.

மாநிலக் கட்சிகளில் அதிமுக, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், அப்னா தளம் (சோனி லால்) பிஜு ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ஆர்), மிசோ தேசிய முன்னணி, சிவசேனை, ஐக்கிய ஜனதா தளம், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, சிரோமணி அகாலி தளம், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் உள்ளிட்டவை திட்டத்தை ஆதரித்தன.

திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்தன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset