நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பள்ளிவாசல்களில் நில ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை

புது டெல்லி:

கோயில்களை இடித்து பள்ளிவாசல்கள், தர்காக்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி அங்கு நில ஆய்வு நடத்துவது தொடர்பான  அனைத்து வழங்குகளுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுபோன்ற புதிய வழக்குகளை வேறு நீதிமன்றங்கள் எடுக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி பள்ளிவாசல், மதுராவில் உள்ள ஈத்கா பள்ளிவாசல், சம்பலில் உள்ள ஜாமா பள்ளிவாசல் உள்பட 10 பள்ளிவாசல்களுக்கு எதிராக ஹிந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டவை என்று ஹிந்துக்கள் தரப்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இது வழிபாட்டுத் தலங்கள்- 1991 சட்டத்துக்கு எதிரானது என்று முஸ்லிம்கள் தரப்பில் கோரப்பட்டது.

அதாவது நாடு சுதந்திரமடைந்த 1947, ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இருந்த வழிபாட்டுத் தலங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம்.

இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் செல்லத்தக்க தன்மையை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, பிற நீதிமன்றங்கள் இந்த விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளில் பள்ளிவாசல்களில் ஆய்வுக்கான இடைக்கால உத்தரவு அல்லது இறுதி உத்தரவு உள்பட எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset