நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மியான்மர், கம்போடியாவில் இணைய மோசடி கும்பலிடம் சிக்கிய 1,664 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

புது டெல்லி:

வேலைவாய்ப்பு என்ற பெயரில் மியான்மர், கம்போடியாவில் சிக்கியிருந்த 1,664 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று கேள்விநேரத்தின்போது தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் மகுந்தா ஸ்ரீநிவாசுலுவின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எழுத்து மூலம் அளித்த பதில்:

கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்புக்காக சென்ற இந்தியர்கள் பலர் ஆன்-லைன் மோசடி கும்பலிடம் சிக்கியிருந்தனர். வெளிநாடுகளில் நல்ல வேலைவாய்ப்பு என்று கூறி அவர்களை அழைத்துச் சென்ற வேலைவாய்ப்பு ஏஜென்சிகள் மோசடி கும்பலிடம் சிக்க வைத்து விட்டன. இதையடுத்து சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகள் உதவியுடன் இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

விளம்பரங்களை நம்பிச் சென்ற இந்தியர்கள் மோசடி கும்பலிடம் சிக்கி அவதிப்பட்டு வந்தனர். இவ்வாறு கம்போடியாவிலிருந்து 1,167 பேரும், மியான்மரிலிருந்து 497 பேரும் என மொத்தம் 1,664 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

சைபர் குற்றங்களில் ஈடுபடும் மியான்மர், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுடன் இந்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அங்கு சைபர் குற்றங்கள் நடப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நாடுகளைத் தொடர்புகொண்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அதுபோன்ற ஆன்-லைன் மோசடிகளை நடத்தும் இணையதளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset