நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அரசமைப்புச் சட்டம் சங் பரிவாரின் புத்தகமல்ல: மக்களவையில் பிரியங்கா அதிரடி கன்னிப்பேச்சு

புது டெல்லி:

நாடாளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சை வெள்ளிக்கிழமை நிகழ்த்திய வயநாடு எம்பி பிரியங்கா,அரசமைப்புச் சட்ட புத்தகம் என்பது சங் பரிவார் அமைப்பின் விதி புத்தகமல்ல என்பதை பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அதிரடியாக பேசினார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி மக்களவையில் வெள்ளிக்கிழமை  விவாதம் நடைபெற்றது. அப்போது, அரசமைப்புச் சட்ட புத்தகத்தை வணங்கும் பிரதமர் மோடி சம்பல், மணிப்பூர், ஹாத்ராஸ் என எங்கு வன்முறை நடந்தாலும் அதை கண்டுகொள்வதில்லை.

அரசமைப்புச் சட்ட புத்தகம் என்பது நாட்டுடையது என்பதையும் அது சங் பரிவார் அமைப்பின் விதி புத்தகமல்ல என்பதையும் பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை.

நேருவை பெயரை மறைக்க அவர் உருவாக்கிய கல்வி, பொதுத் துறை நிறுவனங்களை மோடி அரசு தனியார் மயமாக்கி வருகிறது. மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைத்திருந்தால் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையே மாற்றி இருப்பார்கள் என்று பிரியங்கா பேசினார்.

பிரியங்காவின் பேச்சு தனது கன்னிப் பேச்சைவிட சிறப்பாக இருந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset