செய்திகள் வணிகம்
நாட்டில் ரொட்டி சானாய் போட கூட ஆள் இல்லை; வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியர்களை தட்டிக் கொடுங்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
மலாக்கா:
வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை தட்டிக் கொடுத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியர்கள் சாதனையாளர்களாக உருமாறுவார்கள்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
மலாக்காவில் சாய் துளசி உணவகத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
அதன் உரிமையாளர் சுசீலனுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துகள்.
உணவகங்களுக்கு ரொட்டி சானாய் மாவுகளை தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சுசீலன் தற்போது உணவகத் துறையில் கால்பந்தித்துள்ளார்.
சுவையான உணவும் தரமான சேவையும் இருந்தால் உணவகத் துறையில் சாதிக்கலாம்.
அதே வேளையில் தற்போது உணவகங்களில் ரொட்டி சானாய் போடக் கூட ஆள் இல்லை.
வங்காளதேசிகள் உட்பட பல வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தற்போது ரொட்டி சானாய் போடுகின்றனர். அவருக்கு நாளைக்கு 120 ரிங்கிட் சம்பளம் வழங்கப்படுகிறது.
அவ்வகையில் ரொட்டி சானாய்க்கான மாவு தயாரிக்கும் தொழில் நல்லதொரு எதிர்காலம் கொண்டதாகும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
வீட்டிற்கு ஒரு பட்டதாரி என்பது நமது இலக்காக இருந்தது. அந்த இலக்கு வெற்றி பெற்று தற்போது நமது சமுதாயம் கல்வியில் உயர்ந்து நிற்கிறது.
அடுத்து நம் சமுதாயம் பணக்கார சமுதாயமாக உருவெடுக்க வேண்டும். அதற்கு வியாபாரத்தில் ஈடுபடும் இந்தியர்களை நாம் தட்டிக் கொடுக்க வேண்டும்.
இதன் மூலம் நமது இந்தியர்களும் வர்த்தகத்தில் சாதிப்பார்கள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
