செய்திகள் வணிகம்
இந்தோனேசியப் பங்குச் சந்தை சர்ச்சையில் சிக்கிய சிங்கப்பூர் நிறுவனங்கள்: குற்றச்சாட்டுகளை மறுத்தன
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனம் தெமாசெக்கும் (Temasek) GICயும் இந்தோனேசியப் பங்குச் சந்தை தொடர்பில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன.
அனைத்துலகக் குறியீட்டு நிறுவனம் MSCI யிடம் இந்தோனேசியப் பங்குச் சந்தையின் தரநிலையைக் குறைக்கும்படி நெருக்குதல் கொடுத்தாகக் கூறப்படுவதையும் அவை நிராகரித்தன.
இந்தோனேசிய முன்னாள் வர்த்தக அமைச்சர் முஹம்மது லுட்ஃபி (Muhammad Lutfi), சமூக ஊடகத்தில் அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்தோனேசியப் பங்குகளின் விலையைக் குறைக்கும் நோக்கில் தெமாசெக்கும் GICயும் திரைமறைவில் செயல்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் தெமாசெக் கூறியுள்ளது.
வட்டாரப் பங்குச் சந்தைகள் தொடர்பான முடிவுகளில் மாற்றங்களைச் செய்ய, தெமாசெக் நிறுவனமோ அதன் ஊழியர்களோ MSCIயை ஒருபோதும் தொடர்புகொண்டதில்லை என்றும் அது தெரிவித்தது.
GIC நிறுவனமும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறியுள்ளது.
பங்குச் சந்தை தரவரிசைக்கு ஏற்ப முதலீட்டு முடிவெடுக்கப்படுவதில்லை; மாறாக,
நிறுவனங்களின் செயல்பாடு, சொத்து மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுவதாக அது தெளிவிபடுத்தியது.
இந்தோனேசியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருவதாக GIC தெரிவித்தது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
