செய்திகள் வணிகம்
மலேசிய சாதனைப் புத்தகத்தில் டும் டும் மேட்ரிமோனி: மிகப்பெரிய இந்தியத் திருமணத் தளமாக அங்கீகாரம்
கோலாலம்பூர்:
வீட்டிலிருந்து சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட டும் டும் மேட்ரிமோனி, ஆறு ஆண்டுகளில் வளர்ச்சி கண்டு, மலேசிய சாதனைப் புத்தகத்தில் ‘மிகப்பெரிய இந்தியத் திருமணத் தளம்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
தற்போது 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ள இத்தளத்தின் வழியாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு போஷினி தேவி தொடங்கிய இச்சேவை, ஆரம்பத்தில் வாட்ஸ்அப் வழியாக நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பொருத்தமான வாழ்க்கைத் துணையை அறிமுகப்படுத்தும் முயற்சியாகச் செயல்பட்டது.
பதிவுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தபோது, வயது, கல்வி, தொழில், வசிப்பிடம், குடும்பப் பின்னணி, தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் சுயவிவரங்களை நிர்வகிப்பதில் சவால்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, 2023ஆம் ஆண்டு இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பயனர்கள் எளிதாகச் சேவையைப் பயன்படுத்தும் வகையில் 2025ஆம் ஆண்டு கைப்பேசிச் செயலியும் அறிமுகம் கண்டது.
“குடும்பங்கள் எதிர்பார்க்கும் நம்பிக்கையையும் தனியுரிமையையும் பேணிக்காத்து, பொருத்தமான வாழ்க்கைத் துணையைக் கண்டறிவதை எளிதாக்குவதே எங்களின் நோக்கம்,” என்று போஷினி தேவி கூறினார்.
உயிரித்தொழில்நுட்பப் பட்டதாரியான அவர், சமூகத்தின் தேவையை அடிப்படையாகக் கொண்டு இச்சேவையை உருவாக்கியதன் மூலம் தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பத் துறையில் கால்பதித்தார்.
நிறுவனம் வளர்ச்சி கண்ட நிலையில், அதன் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் அவரது கணவர் தி. சத்தியவர்மனும் இணைந்து, நிறுவனத்தின் செயல்பாடுகள், மின்னிலக்கச் சேவைகள் மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களை வலுப்படுத்தியுள்ளார்.
திருமணமாகாதவர்கள் மட்டுமின்றி, விவாகரத்து பெற்றவர்கள், வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் உள்ளிட்ட மலேசிய, சிங்கப்பூர் குடிமக்களுக்கும் இத்தளம் சேவையாற்றுகிறது.
பெற்றோர்களும் உடன்பிறப்புகளும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காகப் பதிவு செய்து, அவர்களின் சுயவிவரங்களை நிர்வகிக்கும் வசதியும் உள்ளது.
திருமணத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களுக்காக இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயனர்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் வகையில், சுயபடம், அடையாளம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் சரிபார்ப்புகளுடன், சுயவிவர அணுகல் கட்டுப்பாடுகளும் தனியுரிமை அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்பயன்பாட்டிற்காக மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்வதோ பகிர்வதோ இல்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
வீட்டிலிருந்து தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் உள்ள அலுவலகத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.
மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் சேவையாற்றிவரும் டும் டும் மேட்ரிமோனிக்கு, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை மற்றும் இந்தியாவிலுள்ள சமூகங்களிடமிருந்தும் விசாரணைகள் வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, அந்நாடுகளில் சேவையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளைப் படிப்படியாக ஆராய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மலேசிய சாதனைப் புத்தகத்தின் அங்கீகாரம், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, அதன் மீது ஆயிரக்கணக்கான தனிநபர்களும் குடும்பங்களும் வைத்துள்ள நம்பிக்கைக்கும் கிடைத்த பெருமையாக அமைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2026, 9:08 pm
இந்தோனேசியப் பங்குச் சந்தை சர்ச்சையில் சிக்கிய சிங்கப்பூர் நிறுவனங்கள்: குற்றச்சாட்டுகளை மறுத்தன
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
