செய்திகள் வணிகம்
இந்திய பங்குச் சந்தையில் ஜியோ அதிரடி அறிமுகம்: இந்தியாவில் 2ஆம் இடத்தைப் பிடித்தது
மும்பை:
இந்தியக் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் பங்குச் சந்தையில் அதிரடியாக அறிமுகமாகியுள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையில் இன்று அதன் பங்கு விலை 21 விழுக்காடு உயர்ந்தது.
இதன்மூலம் சுமார் 131.5 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்புடன் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது.
530 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஜியோவுக்கு Meta, Google நிறுவனங்களின் ஆதரவும் உள்ளது.
நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் சீனாவின் China Mobile நிறுவனத்திற்கு அடுத்த நிலையில் ஜியோ உள்ளது.
ரிலையன்ஸ் குழுமம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பங்குச் சந்தையில் அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனம் இது.
எண்ணெய், ரசாயனத் துறைகளைத் தாண்டித் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் விரிவடையும் அம்பானியின் திட்டத்தில் இது முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 2:56 pm
சீனாவின் BYD ரக கார்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது
October 23, 2026, 9:07 am
92 ஆண்டுகளுக்குப் பிறகு லீ பிஸ்கட்ஸ், பிஸ்கட் நிறுவனம் உற்பத்தியை நிறுத்துகிறது
October 22, 2026, 3:09 pm
மலேசிய சாதனைப் புத்தகத்தில் டும் டும் மேட்ரிமோனி: மிகப்பெரிய இந்தியத் திருமணத் தளமாக அங்கீகாரம்
October 21, 2026, 9:08 pm
இந்தோனேசியப் பங்குச் சந்தை சர்ச்சையில் சிக்கிய சிங்கப்பூர் நிறுவனங்கள்: குற்றச்சாட்டுகளை மறுத்தன
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
