செய்திகள் வணிகம்
தீபாவளியையொட்டி ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை: வடலூர் சந்தையில் 1500 ஆடுகள் விற்பனை
கடலூர்:
வடலூரில் வார இறுதி நாளான சனிக்கிழமை தோறும் நடைபெறும் சந்தை புகழ்பெற்றது. இங்கு தீபாவளியை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணி முதலே பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடுகள் விற்பனைக்காக வந்திறங்கின.
வடலூர், அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாதோப்பு, புவனகிரி, கம்மாபுரம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் வெள்ளாடுகள், கொடி ஆடுகள், செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.
ஆடுகளை வாங்குவதற்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, மதுரை, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.
ஆடுகளின் எடை, ரகம், தரத்தைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
குறைந்த பட்சம் ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. வியாபாரிகள் போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர்.
நேற்று ஒரே நாளில் 1,500 ஆடுகள் வரை விற்பனையானதாக சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதன்மூலம் சுமார் ரூ.4 கோடி வரை வியாபாரம் நடைபெற்றதாக தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2026, 10:36 pm
துபாய் பெண் ஊழியருக்கு 1.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் லம்போர்கினி கார் பரிசு
October 30, 2026, 3:01 pm
ஒரே நாளில் பல கோடியை ரூபாய் இழந்த கூகுள் நிறுவனம்
October 28, 2026, 9:32 pm
இந்திய பங்குச் சந்தையில் ஜியோ அதிரடி அறிமுகம்: இந்தியாவில் 2ஆம் இடத்தைப் பிடித்தது
October 23, 2026, 2:56 pm
சீனாவின் BYD ரக கார்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது
October 23, 2026, 9:07 am
92 ஆண்டுகளுக்குப் பிறகு லீ பிஸ்கட்ஸ், பிஸ்கட் நிறுவனம் உற்பத்தியை நிறுத்துகிறது
October 22, 2026, 3:09 pm
மலேசிய சாதனைப் புத்தகத்தில் டும் டும் மேட்ரிமோனி: மிகப்பெரிய இந்தியத் திருமணத் தளமாக அங்கீகாரம்
October 21, 2026, 9:08 pm
