செய்திகள் வணிகம்
துபாய் பெண் ஊழியருக்கு 1.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் லம்போர்கினி கார் பரிசு
துபாய்:
துபாயைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘ரிச்கீ பிராப்பர்ட்டீஸ்’ தனது நிறுவனத்தின் பெண் ஊழியருக்கு 1.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஆடம்பர லம்போர்கினி உரூஸ் காரைப் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ரிச்கீ பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தில் நடாலியா சாவேஸ் பெண் முகவராக பணியாற்றி வருகிறார். இவர் இந்த நிறுவனத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார்.
நிறுவனத்தின் 3-ஆம் ஆண்டு விழாவின் போது, 2026-ஆம் ஆண்டின் சிறந்த ஊழியருக்கான விருதை வாங்குவதற்காக நடாலியா சாவேஸ் மேடைக்கு அழைக்கப்பட்டார்.
விருதைப் பெற்றுக்கொண்டு அவர் தனது இடத்திற்குத் திரும்ப முற்பட்டபோது, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தாபன் உத்மான் அவரைத் தடுத்து நிறுத்தினார்.
“நடாலியா, எங்கே செல்கிறீர்கள்? இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா? உங்களுக்குக் காண்பிக்க எங்களிடம் இன்னொன்றும் உள்ளது” என்று கூறி, அரங்கிலிருந்த அனைவரின் கைதட்டல்களுக்கு இடையே அவருக்குப் புதிய நீல நிற ‘லம்போர்கினி உரூஸ்’ காரை பரிசாக வழங்கி அசத்தினார்.
இந்த நெகிழ்ச்சியான தருணம் தொடர்பான வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
“ரிச்கீ நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றினால் என்ன நடக்கும் என்பதற்கு இதுவே சான்று. பெரிய வெற்றிகள், பெரிய கனவுகள். வாழ்த்துகள் நடாலியா, இதற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர்” என்று அந்த நிறுவனம் வீடியோவில் பதிவிட்டுள்ளது.
துபாயில் இந்த லம்போர்கினி உரூஸ் காரின் விலை ரூ.2.3 கோடி முதல் ரூ.4 கோடி ரூபாய் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 1, 2026, 8:27 am
தீபாவளியையொட்டி ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை: வடலூர் சந்தையில் 1500 ஆடுகள் விற்பனை
October 30, 2026, 3:01 pm
ஒரே நாளில் பல கோடியை ரூபாய் இழந்த கூகுள் நிறுவனம்
October 28, 2026, 9:32 pm
இந்திய பங்குச் சந்தையில் ஜியோ அதிரடி அறிமுகம்: இந்தியாவில் 2ஆம் இடத்தைப் பிடித்தது
October 23, 2026, 2:56 pm
சீனாவின் BYD ரக கார்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது
October 23, 2026, 9:07 am
92 ஆண்டுகளுக்குப் பிறகு லீ பிஸ்கட்ஸ், பிஸ்கட் நிறுவனம் உற்பத்தியை நிறுத்துகிறது
October 22, 2026, 3:09 pm
மலேசிய சாதனைப் புத்தகத்தில் டும் டும் மேட்ரிமோனி: மிகப்பெரிய இந்தியத் திருமணத் தளமாக அங்கீகாரம்
October 21, 2026, 9:08 pm
