செய்திகள் வணிகம்
92 ஆண்டுகளுக்குப் பிறகு லீ பிஸ்கட்ஸ், பிஸ்கட் நிறுவனம் உற்பத்தியை நிறுத்துகிறது
பொந்தியான்:
1934இல் நிறுவப்பட்ட பிஸ்கட் பிராண்டான லீ பிஸ்கட்ஸ் மலேசியா இந்த மாத இறுதிக்குள் பொந்தியானில் உள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகளை நிறுத்தவுள்ளது.
இந்த மூடல், அதன் தாய் குழுமத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். சொத்துக்களை ஒருங்கிணைக்கவும், அதன் ரப்பர், பாமாயில் செயல்பாடுகள் உள்ளிட்ட முக்கியத் தொழில்களில் கவனம் செலுத்தவும், அக் குழுமம் தின்பண்ட உற்பத்தித் தொழிலில் இருந்து வெளியேறுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் முதல் விநியோகஸ்தர்களும் வாடிக்கையாளர்களும் உற்பத்தி நிறுத்தம் குறித்த அறிவிப்புகளைப் பெறத் தொடங்கியுள்ள நிலையில், தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிறுவன மூடல் குறித்த செய்தி தனக்குக் கிடைத்ததை பெக்கான் நானாஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர் தான் எங் மெங் உறுதிப்படுத்தினார்.
ஜொகூரில் லீ குழுமத்திற்குச் சொந்தமான உணவு உற்பத்தி ஆலை ஒன்று, கடந்த மூன்று ஆண்டுகளில் மூடப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த 2023 நவம்பரில் எண்ணெய் பனை சாகுபடியில் கவனம் செலுத்தும் முடிவைத் தொடர்ந்து, அந்தக் குழுமம் ஸ்குடாயில் உள்ள தனது லீ பைனாப்பிள் அன்னாசிப்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலையை மூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 2:56 pm
சீனாவின் BYD ரக கார்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது
October 22, 2026, 3:09 pm
மலேசிய சாதனைப் புத்தகத்தில் டும் டும் மேட்ரிமோனி: மிகப்பெரிய இந்தியத் திருமணத் தளமாக அங்கீகாரம்
October 21, 2026, 9:08 pm
இந்தோனேசியப் பங்குச் சந்தை சர்ச்சையில் சிக்கிய சிங்கப்பூர் நிறுவனங்கள்: குற்றச்சாட்டுகளை மறுத்தன
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
