செய்திகள் மலேசியா
மலாக்கா தேர்தல்: பெரிக்காத்தான் நேஷனல் போட்டியிடும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை
கோலாலம்பூர்:
மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்தும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சூரி மொக்தார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எந்தவொரு கட்சியும் தாங்கள் மட்டுமே அந்தத் தொகுதிகளுக்கு முழுச் சொந்தக்காரர்கள் என்று உரிமை கோர முடியாது.
கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு பொதுவான சூத்திரத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். அந்த நியாயமான ஃபார்முலா அடிப்படையிலேயே அனைத்துத் தொகுதிகளும் விவாதிக்கப்பட்டுப் பகிரப்பட வேண்டும்.
மலாக்கா மாநில தேர்தல் தொடர்பான முக்கிய தேதிகளை மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்த உடனேயே இறுதி முடிவு எட்டப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், ஒத்துழைப்பின் வடிவம் மற்றும் தொகுதிகளின் பங்கீடு குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிவிப்போம் என்று சம்சுரி தெரிவித்தார்.
மலாக்கா மாநிலத்தின் அரசியல் சூழல் தற்போது தேர்தல் களைகட்டத் தொடங்கியுள்ளது.
மாநிலத்தின் எதிர்வகால ஆட்சியை நிர்ணயிக்கும் இந்தத் தேர்தலுக்கான வியூகங்களை அனைத்துக் கட்சிகளும் அமைத்து வருகின்றன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 3:59 pm
16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் நாளை அறிவிக்கப்படும்
October 6, 2026, 3:19 pm
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக தேசியக் கூட்டணியை முடக்க பெர்சத்து முயல்கிறது: தக்கியூடின்
October 6, 2026, 3:17 pm
பள்ளிகளில் 5,000-க்கும் மேற்பட்ட பகடிவதை சம்பவங்கள்; குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம்: பிரதமர்
October 6, 2026, 3:16 pm
ECRL டிக்கெட் விற்பனை நவம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: எம்ஆர்எல்
October 6, 2026, 3:14 pm
காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டு மாணவி உயிரிழந்தார்: சந்தேக நபர் கைது
October 6, 2026, 12:14 pm
