நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை மலாக்கா மாநில அம்னோ இன்னும் பெறவில்லை: அப்துல் ரவுஃப்

அலோர்காஜா:

மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை மலாக்கா மாநில அம்னோ  இன்னும் பெறவில்லை.

மலாக்காவின் முதலமைச்சரும், மாநில தேசிய முன்னணி தலைவருமான டத்தோஶ்ரீ  அப்துல் ரவுஃப் யூசோ இதனை கூறினார்.

தமது கட்சிக்கு பட்டியல் கிடைத்தால் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும். இன்னும் பெயர்கள் வரவில்லை. காத்திருங்கள், பொறுமையாக இருங்கள்.

முதலில் பெயர்களை பெற்றுக்கொள்கிறேன், பிறகு சொல்கிறேன் என்று அவர் கூறினார்.

மலாக்கா சர்வதேச கப்பல் முனையத் துறைமுக  திட்டப் பகுதியை பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

முன்னதாக,  மலாக்கா தேர்தலை எதிர்கொள்வதற்காக மஇகா, மசீச தவிர, கட்சியின் மற்ற பிரிவுகளால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பாளர் பெயர்ப் பட்டியலை மலாக்கா அம்னோ ஆய்வு செய்யும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

முடிவு எடுப்பதற்கு முன்பு, விவாதிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்படுவதற்காக, ஒவ்வொரு இடத்திற்கும் குறைந்தது மூன்று வேட்பாளர் பெயர்களையாவது சமர்ப்பிக்குமாறு அனைத்து மாநில அம்னோ தலைமைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் முன்னதாகக் கூறியிருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset