செய்திகள் மலேசியா
ஜொகூரில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து 177 சட்டவிரோதத் தொழிலாளர்களைக் குடிநுழைவுத் துறை கைது செய்தது
இஸ்கண்டார் புத்ரி:
இரண்டு மின்னணுத் தொழிற்சாலைகளில் ஜொகூர் குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில் 177 சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாலை 5.30 மணிக்குத் தொடங்கி சுமார் இரண்டு மணி நேரம், ஜொகூர் குடிநுழைவுத் துறையின் 80 அதிகாரிகள், பணியாளர்கள் இரண்டு தொழிற்சாலைகளில் ஒரே நேரத்தில் நடத்திய சோதனையில், மொத்தம் 177 வெளிநாட்டுத் தொழிலாளர்களும் மூன்று உள்ளூர் முதலாளிகளும் தடுத்து வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டினரில் 35 ஆண்கள், 114 மியனமார் பெண்கள், 23 வங்காளதேச ஆண்கள், மூன்று இந்தோனேசிய ஆண்கள், இரண்டு நேப்பாளப் பெண்கள் ஆகியோர் அடங்குவர்.
அனைத்து வெளிநாட்டினரும், செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் நாட்டிற்குள் நுழைவதைக் குறிக்கும் 1963 ஆம் ஆண்டு குடிநுழைவு சட்டத்தின் பிரிவு 6 (1) (சி)-இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.
அதே நேரத்தில், மூன்று முதலாளிகள் சட்டவிரோத குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக அதே சட்டத்தின் பிரிவு 56 (1) (டி)-இன் கீழ் விசாரிக்கப்பட்டனர்.
முன்னாதாக கைது செய்யப்பட்ட போது பல மியன்மார் பெண்கள் அழுதுகொண்டே ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.
இந்த நாட்டிற்குள் அனுமதி இல்லாமல் நுழைந்து வேலை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டதில் அவர்கள் பெரிதாக வருத்தப்படவில்லை.
ஆனால், தாங்கள் பிடிபட்ட பிறகு தங்கள் சொந்த ஊர்களில் உள்ள, தங்களின் மாதாந்திரப் பணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பத்தினருக்கு என்ன நேருமோ என்று கவலையாகவும் அச்சமாகவும் இருப்பதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
டாமியானோ என்று மட்டும் தன்னை அடையாளப்படுத்த விரும்பிய ஒரு தொழிலாளி, தன்னைச் சார்ந்திருக்கும் தனது பெற்றோர், உடன்பிறப்புகளின் கதியை நினைத்து வருத்தமாகவும் செய்வதறியாது தவிப்பதாகவும் கூறினார்.
அவர் இந்த நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பிழைப்பு நடத்தி வந்த பத்து பஹாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் தனது வேலையை விட்டுவிட்டு, இங்குள்ள ஒரு தொழிற்சாலையில் சில நாட்களாக மட்டுமே வேலை செய்து வருவதாக கூறினார்.
பத்து பஹாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் ஓராண்டுக்கும் மேலாக முறையற்ற வேலை செய்த பிறகு, நான் இந்தத் தொழிற்சாலையில் சில நாட்களாகத்தான் வேலை செய்து வருகிறேன்.
மியன்மாரில் எனக்குத் தந்தை, தாய், உடன்பிறப்புகள் உள்ளனர். நான் அவர்களுக்கு எப்படிப் பணம் கொடுப்பேன். நான் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்டேன் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 3:59 pm
16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் நாளை அறிவிக்கப்படும்
October 6, 2026, 3:19 pm
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக தேசியக் கூட்டணியை முடக்க பெர்சத்து முயல்கிறது: தக்கியூடின்
October 6, 2026, 3:17 pm
பள்ளிகளில் 5,000-க்கும் மேற்பட்ட பகடிவதை சம்பவங்கள்; குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம்: பிரதமர்
October 6, 2026, 3:16 pm
ECRL டிக்கெட் விற்பனை நவம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: எம்ஆர்எல்
October 6, 2026, 3:14 pm
காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டு மாணவி உயிரிழந்தார்: சந்தேக நபர் கைது
October 6, 2026, 12:14 pm
