செய்திகள் மலேசியா
மலாக்கா மாநில தேர்தல்: நம்பிக்கை கூட்டணி இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை
கோலாலம்பூர்:
16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து நம்பிக்கை கூட்டணி இன்னும் எந்தவிதமான இறுதி முடிவும் எடுக்கவில்லை நம்பிக்கை கூட்டணி தகவல் தொடர்பு இயக்குநர் டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
எந்தவொரு அரசியல் கூட்டமைப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக PH தலைவர் மன்றத்தின் மூலமாக மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.
மலாக்கா மாநிலத் தேர்தலைச் சந்திக்க தேசிய முன்னணி கட்சியுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் மற்றும் இடபங்கீடு பற்றியும் PH தரப்பு ஆராய்ந்து வருவதாக இதற்கு முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன
எந்தவொரு கூட்டணிக் கட்சி அல்லது தோழமைக் கட்சியுடனும் இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்று டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் இதற்கு முன்பே திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் பாரிசான் நேஷனல் 21 இடங்களைக் கைப்பற்றி புதிய மாநில அரசாங்கத்தை அமைத்தது. மீதமுள்ள இடங்களை எதிர்க் கட்சிகள் கைப்பற்றிய நிலையில், பாக்காத்தான் ஹராப்பான் கட்சி ஐந்து இடங்களை மட்டுமே வென்றிருந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 3:59 pm
16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் நாளை அறிவிக்கப்படும்
October 6, 2026, 3:19 pm
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக தேசியக் கூட்டணியை முடக்க பெர்சத்து முயல்கிறது: தக்கியூடின்
October 6, 2026, 3:17 pm
பள்ளிகளில் 5,000-க்கும் மேற்பட்ட பகடிவதை சம்பவங்கள்; குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம்: பிரதமர்
October 6, 2026, 3:16 pm
ECRL டிக்கெட் விற்பனை நவம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: எம்ஆர்எல்
October 6, 2026, 3:14 pm
