நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக தேசியக் கூட்டணியை முடக்க பெர்சத்து முயல்கிறது: தக்கியூடின்

கோலாலம்பூர்:

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக ஆர்ஓஎஸ்சிடம் புகார் அளித்ததன் மூலம் கூட்டணியை முடக்க பெர்சத்து முயற்சிப்பதாக தேசியக் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

தேசியக் கூட்டணியின் பதிவு ரத்து செய்யப்படலாம் என எச்சரித்து, கூட்டணியின் பெயரைப் பயன்படுத்தி அதன் செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவிட்ட இரண்டு ஆர்ஓஎஸ் அறிவிப்புகளை ரத்து செய்யக் கோரி தேசியக் கூட்டணி தாக்கல் செய்துள்ள நீதித்துறை மறுஆய்வு மனுவிற்கு ஆதரவாக, தக்கியூடின் ஹசான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளன.

கடந்த ஜூலை 16 அன்று நடைபெற்ற பிஎன் உச்ச மன்றக் கூட்டத்திலிருந்து விலக்கப்பட்ட பிறகு, பெர்சத்து கட்சியானது ஆர்ஓஎஸ்சில் புகாரை அளித்தபோது, ​​அது தீய நோக்கத்தைக் கொண்டிருந்ததாகத் தாம் நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியக் கூட்டணியில் ஓர் அங்கத்துவக் கட்சியாகத் தனக்கு இருந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெர்சத்து கட்சி இந்தப் புகாரை அளிக்கவில்லை.

தேர்தலில் தாங்கள் எதிர்த்து வந்த தேசியக் கூட்டணியை முடக்குவதற்காகவே பெர்சத்து கட்சி இந்தப் புகாரை அளித்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

தேசியக் கூட்டணியில் ஓர் அங்கத்துவக் கட்சியாகத் தனக்கு இருந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெர்சத்து கட்சி இந்தப் புகாரை அளிக்கவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தேர்தலில் தாங்கள் எதிர்த்து வந்த பிஎன் கூட்டணியை முடக்கும் நோக்கத்துடன்தான் பெர்சத்து கட்சி இந்தப் புகாரை அளித்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது ஆதரவுப் பிரமாணப் பத்திரத்தில் தக்கியூடின் குறிப்பிட்டிருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset