செய்திகள் மலேசியா
காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டு மாணவி உயிரிழந்தார்: சந்தேக நபர் கைது
குவாந்தான்:
இங்குள்ள ஆயர் பூத்தே பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 19 வயது மாணவி ஒருவர் தனது காதலனுடன் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரால் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டார்.
அந்த வீட்டில் இருந்த 19 வயது சந்தேக நபர், மேலதிக விசாரணைக்காக போலிசாரால் பின்னர் கைது செய்யப்பட்டார்.
குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் அஷாரி அபு சமா கூறுகையில்,
பாதிக்கப்பட்டவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட பின்னர் நடந்த இந்தச் சம்பவம் குறித்து, சந்தேக நபர் அதிகாலை 4.32 மணிக்கு போலிசாருக்கு தொடர்புகொண்டு புகார் அளித்ததாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவி, வீட்டின் கீழ் தளத்தில் உள்ள ஒரு படுக்கையில் சுயநினைவின்றி கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மருத்துவ அதிகாரிகள் அவர் இறந்துவிட்டதாக அறிவிப்பதற்கு முன்பு, பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் அழுத்தத் தழும்புகள் இருந்ததாகப் பரிசோதனை முடிவுகள் கண்டறிந்தன அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 3:59 pm
16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் நாளை அறிவிக்கப்படும்
October 6, 2026, 3:19 pm
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக தேசியக் கூட்டணியை முடக்க பெர்சத்து முயல்கிறது: தக்கியூடின்
October 6, 2026, 3:17 pm
பள்ளிகளில் 5,000-க்கும் மேற்பட்ட பகடிவதை சம்பவங்கள்; குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம்: பிரதமர்
October 6, 2026, 3:16 pm
ECRL டிக்கெட் விற்பனை நவம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: எம்ஆர்எல்
October 6, 2026, 12:14 pm
