நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூன் அனைத்துலக கல்லூரி, காஜா மாடா பல்கலைக்கழகம் இடையிலான ஒத்துழைப்பு மலேசிய மாணவர்களுக்கான அனைத்துலக கல்வி வாய்ப்புகளை விரிவுப்படுத்துகிறது: பிரபாகரன்

கோலாலம்பூர்:

கூன் அனைத்துலக கல்லூரி, காஜா மாடா பல்கலைக்கழகம் இடையிலான ஒத்துழைப்பு மலேசிய மாணவர்களுக்கான அனைத்துலக கல்வி வாய்ப்புகளை விரிவுப்படுத்துகிறது.

கூன் அனைத்துலக கல்லூரியின் தலைமை இயக்குநர் பிரபாகரன் பெருமாள் இதனை கூறினார்.

காஜா மாடா பல்கலைக்கழகத்தில் கல்வி பயில விரும்பும் மலேசிய மாணவர்களுக்கு மேலும் பல வாய்ப்புகளைத் திறப்பதற்கு இந்த ஒத்துழைப்பு முக்கியமானதாக அமைகிறது.

மேலும் தீபகற்ப மலேசியா, சபா,  சரவா மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கான அனைத்துலக உயர்கல்வி வாய்ப்புகளையும் விரிவுப்படுத்துகிறது.

இந்த உத்திசார்ந்த ஒத்துழைப்பின் மூலம், கூன் அனைத்துலக கல்லூரி,  மலேசிய மாணவர்களுக்கு காஜா மாடா பல்கலைக்கழகத்தில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த பரந்த அறிமுகத்தை வழங்குவதையும், அவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்வதற்கான பாதைகள் குறித்த தெளிவான வழிகாட்டுதலை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, 2027ஆம் ஆண்டின் தொடக்க சேர்க்கைக்காக அறிவியல் அடிப்படைகள் திட்டத்தைப் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கூன் அனைத்துலக கல்லூரி கல்வி உதவித்தொகையையும் வழங்குகிறது.

இந்த முன்னெடுப்பு, சிறந்த கல்விச் சாதனையை வெளிப்படுத்தி, தங்கள் படிப்பைத் தொடரத் திறனுள்ள மாணவர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தக் கூட்டு முயற்சியின் மூலம் முன்னிலைப்படுத்தப்படக்கூடிய துறைகளில் மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல், கால்நடை மருத்துவம் ஆகியவற்றில் இளங்கலை கல்வியும் அடங்கும்.

இந்தக் கூட்டு முயற்சியானது, மாணவர்கள் தங்களின் தற்போதைய கல்வியை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை இன்னும் தெளிவாகக் காண உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தங்கள் தற்போதைய கல்வியை உயர் நிலைக்குக் கொண்டு செல்ல பல்வேறு வழிகள் உள்ளன என்பதை எங்கள் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

இந்தக் கூட்டு முயற்சியின் மூலம், இந்தக் கல்வி வாய்ப்புகளை மாணவர்களுக்கு இன்னும் எளிதாகக் கிடைக்கச் செய்ய நாங்கள் நம்புகிறோம்.

உயர் கல்வித் திறனைக் கொண்ட மற்றும் உயர்கல்வியைத் தொடர உந்துதல் பெற்ற மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி உதவித்தொகைத் திட்டம் கூடுதல் ஆதரவை வழங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

முன்னதாக இன்றைய நிகழ்வில் மலேசியாவுக்கான இந்தோனேசிய தூதரகத்தின் பிரதிநிதியான கல்வித் தூதர் அஹ்மத் ரோமதோனி சூர்ய புத்ரா, காஜா மாடா பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவரும் பேராசிரியருமான பேராசிரியர் தெகு புடிபிடோஜோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset