செய்திகள் மலேசியா
முகமது சுஹாய்லி வழக்கு; சிசிடிவி காட்சிகளை கசியவிட்டது யார் என்பது குறித்தும் போலிஸ் விசாரித்து வருகிறது: சைபுடின்
கோலாலம்பூர்:
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமது சுஹாய்லி முகமது ஜைன் மீது ஒரு அரசு ஊழியருக்கு எதிராக சுமத்தப்பட்ட முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்த தனது ஆரம்பகட்ட அறிக்கையை, போலிஸ் இன்று சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க உள்ளது.
விசாரணை நிறைவடைந்துவிட்டதா அல்லது மேலதிக நடவடிக்கை தேவையா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்பு, சட்டத்துறை தலைவர் அலுவலகம் இந்த விசாரணை அறிக்கையை ஆய்வு செய்யும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியன் இஸ்மாயில் கூறினார்.
இல்லையென்றால் அந்த அறிக்கை உண்மையிலேயே நம்பத்தகுந்ததாக உள்ளதா அல்லது போதுமான வழக்கு அடிப்படை உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, சட்டத்துறை தலைவர் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட அதிக வாய்ப்புள்ளது என்று அவர் இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வின் போது கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளிக் காட்சிகள் கசிந்து பரப்பப்பட்டது குறித்து அலோர்ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினர் அப்னான் ஹமிமி தாயிப் அஸாமுதீன் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், இது விமான நிலையப் பாதுகாப்பு அமைப்புடன் தொடர்புடையது என்பதால், இதுபோன்ற காணொளிக் கசிவுகள் மீண்டும் நிகழாது என்ற உறுதிமொழியையும் அஃப்னான் கோரினார்.
சிசிடிவி காணொளிக் கசிவு மற்றும் அது பரப்பப்பட்டதற்கான காரணம் ஆகியவையும் போலிஸ் விசாரணையின் முக்கியக் கவனங்களில் அடங்கும் என்று சைபுடின் கூறினார்.
விசாரணையின் அடிப்படை மற்றும் திசை நிர்ணயிக்கப்பட்டபோது, உரையாடல் பதிவு மற்றும் பிற ஆதாரங்களுடன், கசிவின் கூறுகள் மற்றும் காணொளி பரப்பப்பட்டதற்கான காரணமும் சரிபார்ப்புப் பட்டியலில் இருந்தன. அது காவல்துறையின் நடவடிக்கையில் இருந்தது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 3:59 pm
16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் நாளை அறிவிக்கப்படும்
October 6, 2026, 3:19 pm
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக தேசியக் கூட்டணியை முடக்க பெர்சத்து முயல்கிறது: தக்கியூடின்
October 6, 2026, 3:17 pm
பள்ளிகளில் 5,000-க்கும் மேற்பட்ட பகடிவதை சம்பவங்கள்; குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம்: பிரதமர்
October 6, 2026, 3:16 pm
ECRL டிக்கெட் விற்பனை நவம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: எம்ஆர்எல்
October 6, 2026, 3:14 pm
காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டு மாணவி உயிரிழந்தார்: சந்தேக நபர் கைது
October 6, 2026, 12:14 pm
