செய்திகள் மலேசியா
ECRL டிக்கெட் விற்பனை நவம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: எம்ஆர்எல்
கோலாலம்பூர்:
கிழக்குக் கடற்கரை ரெயில் லிங்க் (ECRL) பயண டிக்கெட் விற்பனையை இந்த நவம்பரில் தொடங்க இலக்கு வைத்துள்ளது.
இதற்கான அரசாங்க ஒப்புதல் கிடைத்தவுடன் கட்டணங்கள் அறிவிக்கப்படும் என்று மலேசியா ரயில் லிங்க் (MRL) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஶ்ரீ தர்விஸ் அப்துல் ரசாக் கூறினார்.
கட்டண நிர்ணயம் தற்போது அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளது. அது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும்.
டிசம்பர் நடுப்பகுதியில் ECRL-இன் இலக்கு வணிக ரீதியான செயல்பாட்டிற்கு முன்னதாக, நவம்பரில் டிக்கெட் விற்பனையைத் தொடங்க ஏதுவாக, கட்டணங்கள் குறித்த முடிவு இந்த மாதமே எடுக்கப்படும்.
டிக்கெட் விலைகள் போக்குவரத்து அமைச்சால் அறிவிக்கப்படும். இந்த விவகாரம் இன்னும் அமைச்சரவை மட்டத்தில் உள்ளது.
மேலும் விரைவில் அமைச்சரவை இந்த விலைகள் குறித்து முடிவெடுக்கும்.
ஒப்புதல் கிடைத்தவுடன், கோம்பாக்கிலிருந்து கோத்தாபாரு வரையிலான பயணம் உட்பட, பயன்படுத்தப்படவுள்ள கட்டணங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம்.
முடிந்தால், நாங்கள் நவம்பரில் டிக்கெட் விற்பனையைத் தொடங்க விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 3:59 pm
16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் நாளை அறிவிக்கப்படும்
October 6, 2026, 3:19 pm
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக தேசியக் கூட்டணியை முடக்க பெர்சத்து முயல்கிறது: தக்கியூடின்
October 6, 2026, 3:17 pm
பள்ளிகளில் 5,000-க்கும் மேற்பட்ட பகடிவதை சம்பவங்கள்; குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம்: பிரதமர்
October 6, 2026, 3:14 pm
காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டு மாணவி உயிரிழந்தார்: சந்தேக நபர் கைது
October 6, 2026, 12:14 pm
