நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகளில் 5,000-க்கும் மேற்பட்ட பகடிவதை சம்பவங்கள்; குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம்: பிரதமர்

கோலாலம்பூர்:

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மொத்தம் 5,681 பகடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த புள்ளி விவரங்களில் உடல்ரீதியான, வாய்மொழி, சைகைவழி, இணையவழி பகடிவதை சம்பவங்களும் அடங்கும்.

இருப்பினும், அந்தந்தப் பள்ளிகளின் நற்பெயரைப் பாதுகாக்க நிர்வாகம் விரும்புவதால், கல்வி மையங்களில் நடக்கும் பகடிவதைகள், ஒழுங்கீனச் சம்பவங்கள் பதிவாகாமல் போவதைக் கருத்தில் கொண்டால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம்.

பிரச்சினை என்னவென்றால், சில சமயங்களில் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஏனெனில், பள்ளியின் நற்பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், பள்ளியின் புகழைப் பாதுகாக்க விரும்புவதாலும், அவர்கள் ஒரு நல்ல அறிக்கையை மட்டுமே அளிக்கிறார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால், பள்ளியில் உள்ள குழந்தைகள் பள்ளிக்குள் நுழையும்போது துன்புறுத்தப்பட்டதாகவும் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் உணர்கிறார்கள்.

எனவே இதை மறைக்காதீர்கள். ஏனென்றால் இந்தக் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது, இந்த அணுகுமுறை தவறானது.

இதுபோன்ற நேர்வுகளில், காரணம் எதுவாக இருந்தாலும், விரைவாகவும் உறுதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்று அவர் இன்று மக்களவையில் நடைபெற்ற அமைச்சர்களின் கேள்வி நேரத்தின்போது கூறினார்.

பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் நடைமுறைகளும் வகுக்கப்பட்டிருந்த போதிலும், மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் சம்பவங்கள் பள்ளிகளில் இன்னும் நிகழ்கின்றன என்பது குறித்து இன்ட்ரா கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா எழுப்பிய கேள்விக்கு டத்தோஶ்ரீ அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset