நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தும்பாட்டில் பள்ளிவாசல் கதவு உடைக்கப்பட்டது: கம்பளத்தின் மீது திரவம் ஊற்றப்பட்டது

தும்பாட்:

கிளந்தானின் தும்பாட்டில் உள்ள ஒரு பள்ளிவாசலை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை போலிஸ் தேடி வருகிறது.

தும்பாட் மாவட்ட போலிஸ் தலைவர் கைரி ஷாபி இதனை கூறினார்.

பள்ளிவாசலின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டுள்ளது.

தொழுகை கூடத்தில் உள்ள கம்பளத்தின் மீது துர்நாற்றம் வீசும், பச்சை கலந்த பழுப்பு நிற திரவம் ஊற்றப்பட்டுள்ளது.

கோத்தா எஸ்பிபி வாரிசானில் உள்ள மஸ்ஜித் அல்-அஜீஸ் அல்-ஹதியில் நடந்த சம்பவத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம் என நம்பும் ஒரு நபரும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

வழிபாட்டுத் தலத்தை அவமதித்தமை, பொது சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், தண்டனைச் சட்டத்தின் 295 மற்றும் 427ஆவது பிரிவுகளின் அடிப்படையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset