நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு

சென்னை:

இந்தியாவில் தயாரித்து விநியோகிக்கப்படும் Everest சீரகத் தூளை உடனடியாக மீட்டுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அது உட்கொள்வதற்குப் பாதுகாப்பானது அல்ல என்று இந்திய உணவுப் பாதுகாப்புத் தரநிலை ஆணையம் தெரிவித்தது.

கோவாவில் சேகரிக்கப்பட்ட Everest சீரகத் தூளின் சில மாதிரிகள் சோதிக்கப்பட்டன.

அவற்றில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான அளவு பூச்சிக்கொல்லி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட Everest சீரகத் தூள் பொட்டலங்கள் உடனடியாகக் கடைகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் விற்பனை செய்யப்பட்டுவரும் இந்த சீரகத்தூள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று தகவல் தெரியவில்லை.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset