செய்திகள் வணிகம்
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
கலிபோர்னியா:
Starbucks நிறுவனம் வட அமெரிக்காவில் மேலும் 250 காப்பிக்கடைகளை மூடவிருக்கிறது. நிறுவனம் அதன் நிதிச் செயல்முறையை மெருகேற்ற முயல்கிறது.
வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கமுடியாத அல்லது அவர்கள் எதிர்பார்க்கும் அனுபவத்தை வழங்கமுடியாத கிளைகளை மூடுவதாக Starbucks தெரிவித்துள்ளது.
வட அமெரிக்காவில் Starbucks-க்குச் சுமார் 18 ஆயிரம் கிளைகள் உள்ளன. தற்போது மூடப்படும் கிளைகள் அதன் மொத்த எண்ணிக்கையில் சுமார் ஒரு விழுக்காடு.
2024-ஆம் ஆண்டு Starbucks தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரு. பிரையன் நிக்கோல் (Brian Niccol) பொறுப்பேற்றார். அப்போதிலிருந்து நிறுவனம் அதன் வர்த்தகச் செயல்முறையை மறுசீரமைத்துவருகிறது.
வேகவேகமாகப் புதிய கிளைகளைத் திறப்பதையும் Starbucks குறைக்கிறது.
நிக்கோல் முன்பு Chipotle விரைவு உணவக நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தார்.
அமெரிக்கச் சந்தையில் Starbucks நிறுவனத்தின் வர்த்தகச் செயல்முறைக்குப் புதிதாக மெருகேற்ற அவர் முயன்று வருகிறார்.
நடப்பு நிதியாண்டில் (2026) உலக அளவில் சுமார் 650 கிளைகளைத் திறக்க Starbucks திட்டமிட்டிருந்தது. அதைக் குறைத்து 440 புதிய கிளைகளை Starbucks திறக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆதாரம்: ராய்ட்டர்ஸ்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
