நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு

புது டெல்லி:

Apple நிறுவனம் இந்தியாவில் பழைய iPhone ரகத் திறன்பேசிகளின் விலையை சுமார் 41 விழுக்காடு உயர்த்தியுள்ளது.

உலகளவில் iPhone திறன்பேசிகளின் விலையை அதிகரிக்கப்போவதாக முன்பு Apple அறிவித்திருந்தது.

அதிக விலையேற்றத்திற்கு ஆளான நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தியா Apple நிறுவனத்தின் வேகமாக வளரும் சந்தைகளில் ஒன்று.

உலகெங்கும் விற்கப்படும் iPhone திறன்பேசிகளில் பெருமளவு இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

இருப்பினும் பாகங்களுக்கான ஒன்றிய அரசின் இறக்குமதி வரி, 18 விழுக்காட்டுப் பொருள், சேவை வரி ஆகியவற்றால் இந்தியாவில் iPhone திறன்பேசிகளின் விலை அமெரிக்காவைக் காட்டிலும் அதிகம்.

வழக்கமாகப் புதிய ரகத் திறன்பேசிகளை வெளியிட்ட பின்பு Apple பழைய திறன்பேசிகளின் தயாரிப்பை நிறுத்திவிடும்.இம்முறை அது அவ்வாறு செய்யவில்லை.

அமெரிக்காவில் திறன்பேசிகளின் விலை 10 விழுக்காடு முதல் 21 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset