நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

மெஸ்தெலா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் வெலன்சியா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் வெலன்சியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணிக்காக லெமனே யமால் இரு கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை பெர்மின் லோபஸ், ராபின்ஹா, பெட்ரி ஆகியோர் அடித்தனர்.

லா லீகாவின் புதிய சீசனின் களமிறங்கிய நான்கு ஆட்டங்களிலும் பார்சிலோனா அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் அலாவேய்ஸ் அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் ஓசாசுனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset