நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை: 1,165 ரிங்கிட் அபராதம்

லிஸ்பன்:

போர்த்துகல் தேசிய அணியின் பயிற்சி முகாமை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போர்த்துகல் கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

41 வயதான அந்த வீரர், செப்டம்பர் 30 அன்று ஐரோப்பிய தேசிய லீக் போட்டியின் போது போர்த்துகல் முகாமை விட்டு எதிர்பாராத விதமாக வெளியேறினார்.

மேலும் தனக்கு விளையாட வாய்ப்பளிப்பதாக அளித்த வாக்குறுதியை பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் மீறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பில் ரொனால்டோ அக்டோபர் மாத தொடக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியதுடன், எந்தவொரு தண்டனையையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

முன்னாள் மென்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் நட்சத்திரமான அவருக்கு 255 யூரோக்கள் (1,165 ரிங்கிட்) அபராதமும் விதிக்கப்பட்டது. 

மேலும், தேசிய அணியை விட்டு வெளியேறும் வீரர்களுக்கு ஒன்று முதல் ஆறு மாதங்கள் வரை தடை விதிக்கும் கூட்டமைப்பின் விதிகளின்படி, இது குறைந்தபட்ச தண்டனையாகும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset