நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா அதிர்ச்சி

பாரிஸ்: 

ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் தோல்வி கண்டு பார்சிலோனா அணியினர் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

பார்க் டி பிரின்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் பிஎஸ்ஜி அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் பார்சிலோனா அணியினர் 2-4 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணியிடம் தோல்வி கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ஸ்டூகார்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.

புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் சபா எப்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset