நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.

சந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் செவிலா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் செவிலா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ரியல்மாட்ரிட் அணிக்காக கிளையன் எம்பாப்பே இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை அர்டா குலார், டிமாண்டே ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ரியல் சோஷிடாட் அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் மலாகா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

கெல்தா விகோ அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அலாவேய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset