நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டென்மார்க் பொது பூப்பந்து போட்டி: பெர்லி தான் - எம்.தீனா ஜோடி வாகை சூடினர் 

ஒடென்ஸ்: 

டென்மார்க் பொது பூப்பந்து போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் பெர்லி தான் - எம். தீனா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர். 

இப்போட்டியில் ஜப்பானின் ஹினாடா சுஸுகி - நாவோ யாமாகிதா ஜோடியை வீழ்த்தி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவுக்கு இக்கோப்பையை இவர்கள் பெற்றுத் தந்துள்ளனர்.

இவர்கள் 21-18, 21-11 என்ற நேர் செட்களில் 36 நிமிடங்களிலேயே எதிரணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றனர்.

இதற்கு முன்னதாக 2008-ஆம் ஆண்டில் சின் ஈ ஹுய் - வோங் பெய் டி ஜோடி டென்மார்க் ஓபனில் மகளிர் இரட்டையர் பட்டத்தைக் கைப்பற்றியதே மலேசியாவின் கடைசி வெற்றியாக இருந்தது.

அதன்ப பிறகு நீண்ட இடைவெளிக்குப்பின் தற்போது பியர்லி - தீனா இணை இச்சாதனையை மீண்டும் நிகழ்த்தியுள்ளது.

மகளிர் இரட்டையர் பிரிவில் கிடைத்துள்ள இந்த மகத்தான வெற்றி தேசிய பேட்மிண்டன் அரங்கில் புதிய உற்சாகத்தை விதைத்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து மலேசிய விளையாட்டுத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் பெர்லி - தீனா ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset