செய்திகள் மலேசியா
லங்காவி மிகவும் சிறியது என்றால்' லிமா கண்காட்சிக்கு மாற்று இடம் தேவைப்படலாம்: பாதுகாப்பு அமைச்சர் காலித்
லங்காவி:
வளர்ந்து வரும் பிராந்தியப் போட்டிக்கு மத்தியில், லங்காவி சர்வதேச கடல்சார், விண்வெளிக் கண்காட்சி தொடர்ந்து போட்டித்தன்மையுடன் நீடிப்பதற்காக, மாற்று இடங்களை ஆராயுமாறு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் காலித் நூர்தீன் (Datuk Seri Mohamed Khaled Nordin) பரிந்துரைத்துள்ளார்.
இந்தோனேசியா, வியட்நாம் போன்ற அண்டை நாடுகளை உதாரணமாகக் காட்டி, அதிகரித்து வரும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கைக்கு இடமளிக்க, மேம்படுத்தப்பட்ட வசதிகள் தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.
மலாக்காவில் உள்ள கிளெபாங் ஒரு சாத்தியமான மாற்று இடமாகும், இருப்பினும், பொருத்தமான கண்காட்சி உள்கட்டமைப்பிற்கு கணிசமான முதலீடு தேவைப்படுகிறது.
வரம்புகள் காரணமாக இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டாலன்றி, லிமா கண்காட்சி லங்காவியிலேயே தொடர வேண்டும் என்று துன் டாக்டர் மகாதீர் முஹம்மது தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து இந்தப் பரிந்துரை வந்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
