செய்திகள் மலேசியா
சரவா மாநில சட்டமன்றம் இன்று மாலை கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
கூச்சிங்:
சரவா முதலமைச்சர், டான் ம்ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபெங், இன்று மாலை சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரவா முதலமைச்சர் அலுவலகம் விடுத்த ஊடக அழைப்பின்படி, இங்குள்ள சத்ரியா பெர்டிவி வளாகத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்.
அண்மையில் மாநிலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சரவா மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் தேதி குறித்த யூகங்கள் கடந்த சில நாட்களாகக் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
சரவா மாநில சட்டமன்றம், இந்த பதவிக் காலத்திற்கான தனது கடைசி கூட்டத்தொடராக கடந்த புதன்கிழமை கூடியது.
அன்று தான் சரவா வரவு செலவுத் திட்டம் 2027-க்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்போது 82 இடங்களைக் கொண்டுள்ள சரவா மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 2027-ல் முடிவடையும்.
2021 டிசம்பரில் நடைபெற்ற சரவா பொதுத் தேர்தலில், அபாங் ஜொஹாரி தலைமையிலான கபுங்கான் பார்ட்டி சரவா ஜிபிஎஸ், போட்டியிட்ட 82 இடங்களில் 76 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 10:36 am
மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு சமூகத்தின் ஒற்றுமை அவசியம்: டத்தோ ப.சகாதேவன் கருத்து
October 23, 2026, 9:54 am
1 எம்டிபி சொத்துக்களை மீட்கும் முயற்சிகளைப் பொதுமன்னிப்பு பாதிக்காது: பிரதமர் அன்வார்
October 23, 2026, 9:51 am
மலாக்கா மாநில தேர்தல் வேட்பாளர்களை அறிவிக்க தேசிய முன்னணி, பாஸ் மேடையைப் பகிர்ந்து கொள்ளும்: ஜாஹித்
October 23, 2026, 9:21 am
நேப்பாளத்தில் காணாமல் போன 54 பேரை கண்டறியும் முயற்சிகளை மலேசியா தொடர்கிறது: முஹம்மது ஹசான்
October 22, 2026, 10:16 pm
