நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

WAZE செயலியைத் தடை செய்ய அரசாங்கம் பரிசீலனை: பிரதமர் அன்வார் 

அம்பாங்: 

நாட்டில் WAZE செயலியை முழுவதுமாக தடை செய்ய அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

WAZE செயலிக்கு மாற்றாக மற்றொரு செயலி திறம்பட செயல்படுமானால் அதனை பயன்படுத்த தீவிரம் காட்டப்படும் என்று அன்வார் சொன்னார். 

அடுத்தகட்ட நடவடிக்கையைப் பரிசீலிப்பதற்கு முன், மாற்றுச் செயலிகளின் திறன்களை அரசு முதலில் மதிப்பீடு செய்யும்

முன்னதாக, பிரதமர் அன்வார் இப்ராஹிம் அம்பாங் தாமான் நிர்வானாவில் உள்ள மஸ்ஜிட் அல்- முஸ்தகிமமில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் WAZE செயலியை அரசு ஊழியர்கள் பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில் இந்த விவகாரம் நாட்டில் பெரும் பேசுப்பொருளானது 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset