நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில தேர்தல்: நம்பிக்கை கூட்டணி குறைந்தது 18 இடங்களில் போட்டியிடும் 

கோலாலம்பூர்: 

மலாக்கா மாநில தேர்தலில் நம்பிக்கை கூட்டணி குறைந்தது 18 சட்டமன்ற இடங்களில் போட்டியிடும்.

அனைத்து 28 சட்டமன்ற தொகுதிகளிலும் நம்பிக்கை கூட்டணி அதன் வேட்பாளர்களைக் களமிறக்காமல் இந்த வியூகத்தை மாற்றியமைத்துள்ளதாக மலாக்கா மாநில நம்பிக்கை கூட்டணி தலைவர் அட்லி ஸஹாரி கூறினார். 

இவ்வாரம் சனிக்கிழமை நம்பிக்கை கூட்டணி போட்டியிடும் மொத்த சட்டமன்ற தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ வெளியாகும் என்று அவர் தெரிவித்தார். 

அமானா கட்சி எட்டு சட்டமன்ற இடங்களிலும் எஞ்சிய தொகுதிகளில் பிகேஆர் அல்லது ஜசெக போட்டியிடும் என்று சொல்லப்பட்டாலும் சனிக்கிழமை அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார். 

இந்த ஆண்டு மலாக்கா மாநிலத் தேர்தலில், கடந்த தேர்தலில் வென்ற இடங்களின் எண்ணிக்கையை விட அதிகமான இடங்களைக் கொண்டு தனது செல்வாக்கை வலுப்படுத்த நம்பிக்கை கூட்டணி  அமைப்பு முயல்கிறது.

16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. அனைத்து 28 சட்டமன்ற இடங்களிலும் தேர்தல் நடத்தப்படவுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset