செய்திகள் மலேசியா
குழந்தைகள், இளைஞர்களிடையே உள்ள மனநலப் பிரச்சினைகள் கவலையளிக்கிறது: அரசியார்
கோலாலம்பூர்:
குழந்தைகள், இளைஞர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து, உயிரிழப்புகளுக்கு வழிவகுப்பதாகக் காணப்படுவதால், அரசியார் ராஜா ஸரித் சோஃபியா கவலை தெரிவித்துள்ளார்.
இன்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் அதிகாரப்பூர்வ முகநூல் பதிவின்படி,
இளைய தலைமுறையினரின் மன, உணர்ச்சி ரீதியான நல்வாழ்வு குறித்த மாட்சிமை தங்கிய மாமன்னரின் அக்கறையானது, புகார்கள் மற்றும் ஆலோசனை அமைப்பை மேம்படுத்துதல், வலுப்படுத்துதல் தொடர்பான முயற்சிகளை ஆராய்வதற்காக ஒரு கலந்துரையாடல் அமர்வை நடத்துவதன் மூலம் இஸ்தானா நெகாராவை முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தூண்டியுள்ளது.
இந்த முயற்சி குறிப்பாக மன அழுத்தம், மனநலப் பிரச்சினைகள், பல்வேறு வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும் இளம் பருவத்தினருக்கு உதவுவதற்காகும்.
கல்வியமைச்சு, மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சு, தகவல் தொடர்பு அமைச்சு, போலிஸ், மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் உள்ளிட்ட பல அரசு நிறுவனங்களின் பங்கேற்புடன், டத்தோ படுக்கா மகாராஜா லேலா இஸ்தானா நெகாரா அஸுவான் எபெண்டி ஸைரகித்நைனி இந்தக் கலந்துரையாடல் அமர்வுக்குத் தலைமை தாங்கினார்.
எளிதில் அணுகக்கூடிய, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள புகார் அளிக்கும் வழிமுறைகளையும் உதவித் தளங்களையும் வலுப்படுத்த வேண்டும்.
அத்துடன் கவனமும் உதவியும் தேவைப்படும் மாணவர்களுக்கான ஆதரவு அமைப்பின் செயல்திறனை அதிகரிப்பது ஆகிய முயற்சிகளில் இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 10:05 pm
இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதில் மலேசிய நிறுவனம் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
October 23, 2026, 3:44 pm
சரவாக் மாநில சட்டமன்றம் அக்டோபர் 26ஆம் தேதி கலைக்கப்படும்: அபாங் ஜொஹாரி அறிவிப்பு
October 23, 2026, 3:23 pm
WAZE செயலியைத் தடை செய்ய அரசாங்கம் பரிசீலனை: பிரதமர் அன்வார்
October 23, 2026, 3:15 pm
மலாக்கா மாநில தேர்தல்: நம்பிக்கை கூட்டணி குறைந்தது 18 இடங்களில் போட்டியிடும்
October 23, 2026, 3:12 pm
தேசிய முன்னணியுடன் இணைந்து பாஸ் கட்சி கூட்டாக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியா? பாஸ் கட்சி மறுப்பு
October 23, 2026, 3:11 pm
ரமணன் மீது அவதூறு வழக்குத் தொடுக்கிறார் ரஃபிஸி
October 23, 2026, 11:27 am
