செய்திகள் மலேசியா
ரமணன் மீது அவதூறு வழக்குத் தொடுக்கிறார் ரஃபிஸி
கோலாலம்பூர்:
முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி, மனித வள அமைச்சர் ரமணனின் மீது கூறி வரும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஆர். ரமணன் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
ரமணனின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட ஆவணங்களைத் தனது சட்டக் குழுவிடம் ரஃபிஸி, வழங்கியுள்ளார். இதன்மூலம், அவதூறு சட்டங்களின் கீழ் வழக்குத் தொடர வலுவான அடிப்படை இருப்பதாக அவர் வலியுறுத்துகிறார்.
ஒரு பெரிய நிதித் தொகை சம்பந்தப்பட்ட இலஞ்ச வழக்கில் ரமணனுக்குத் தொடர்பு இருப்பதாக ரஃபிஸி முன்பு கூறிய குற்றச்சாட்டுகளிலிருந்து இந்தத் தற்போதைய சர்ச்சை உருவாகியுள்ளது.
மேலும், ரமணன் தொடங்கிய சட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்த அறிக்கைகளில் உள்ள முரண்பாடுகளும் இந்தச் சூழ்நிலையில் அடங்கியுள்ளன என்று ரபிசி கூறினார்.
- பிதா
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 3:44 pm
சரவாக் மாநில சட்டமன்றம் அக்டோபர் 26ஆம் தேதி கலைக்கப்படும்: அபாங் ஜொஹாரி அறிவிப்பு
October 23, 2026, 3:23 pm
WAZE செயலியைத் தடை செய்ய அரசாங்கம் பரிசீலனை: பிரதமர் அன்வார்
October 23, 2026, 3:15 pm
மலாக்கா மாநில தேர்தல்: நம்பிக்கை கூட்டணி குறைந்தது 18 இடங்களில் போட்டியிடும்
October 23, 2026, 3:12 pm
தேசிய முன்னணியுடன் இணைந்து பாஸ் கட்சி கூட்டாக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியா? பாஸ் கட்சி மறுப்பு
October 23, 2026, 11:27 am
சரவா மாநில சட்டமன்றம் இன்று மாலை கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
October 23, 2026, 10:36 am
மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு சமூகத்தின் ஒற்றுமை அவசியம்: டத்தோ ப.சகாதேவன் கருத்து
October 23, 2026, 9:54 am
