நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியுடன் இணைந்து பாஸ் கட்சி கூட்டாக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியா? பாஸ் கட்சி மறுப்பு 

பெட்டாலிங் ஜெயா: 

மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணியுடன் இணைந்து பாஸ் கட்சி அதன் வேட்பாளர்களை அறிவிக்கும் என்ற தகவலை அக்கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் மறுத்தார் 

 ஒரே மேடையில் தேசிய முன்னணியுடன் நாங்கள் இணைவது குறித்து இதுவரை தகவல் இல்லை. 

அக்டோபர் 28 அல்லது 29ஆம் தேதிகளில் நாங்கள் எங்கள் வேட்பாளர்களை அறிவிப்போம் என்று துவான் இப்ராஹிம் கூறியதாக உத்துசான் மலேசியா வெளியிட்டுள்ளது 

மேலும், தேசிய முன்னணியுடன் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றதாக கூறப்படும் கூற்றையும் அவர் முற்றிலுமாக மறுத்தார் 

தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு சட்டமன்ற இடங்களைக் கொருவோம் என்று அவர் சொன்னார் 

முன்னதாக, தேசிய முன்னணியும் பாஸ் கட்சியும் ஒன்றாக இணைந்து வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. மலாக்கா மாநிலத்தில் மொத்தம் 28 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset