செய்திகள் மலேசியா
இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதில் மலேசிய நிறுவனம் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
புத்ராஜெயா:
அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, இந்தோனேசியாவில் காடுகளை எரிக்கும் நடவடிக்கைகளில் இதுவரை எந்த மலேசிய நிறுவனமும் ஈடுபடவில்லை.
காட்டுத் தீப் பிரச்சினை தொடர்பாக 11 நிறுவனங்களுக்கு எதிராக இந்தோனேசிய அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
இருப்பினும், மலேசிய அரசாங்கத்திற்குக் கிடைத்த தகவல்களின்படி, இந்த நடவடிக்கையில் எந்த உள்ளூர் நிறுவனமும் ஈடுபட்டதாக அடையாளம் காணப்படவில்லை.
இதுவரை, இந்தோனேசியாவில் காடுகளை எரிக்கும் நடவடிக்கைகளில் எந்த மலேசிய நிறுவனமும் ஈடுபடவில்லை.
காட்டுத் தீ, புகைமூட்டம் பிரச்சினை, அத்துடன் மலேசியா-இந்தோனேசியா இருதரப்பு உறவுகள் குறித்தும் அரசாங்கம் விவாதித்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த முன்னேற்றம் தெரிவிக்கப்பட்டது என்று அவர் இன்று இங்குள்ள தகவல் தொடர்பு அமைச்சில் நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 10:52 pm
குழந்தைகள், இளைஞர்களிடையே உள்ள மனநலப் பிரச்சினைகள் கவலையளிக்கிறது: அரசியார்
October 23, 2026, 3:44 pm
சரவாக் மாநில சட்டமன்றம் அக்டோபர் 26ஆம் தேதி கலைக்கப்படும்: அபாங் ஜொஹாரி அறிவிப்பு
October 23, 2026, 3:23 pm
WAZE செயலியைத் தடை செய்ய அரசாங்கம் பரிசீலனை: பிரதமர் அன்வார்
October 23, 2026, 3:15 pm
மலாக்கா மாநில தேர்தல்: நம்பிக்கை கூட்டணி குறைந்தது 18 இடங்களில் போட்டியிடும்
October 23, 2026, 3:12 pm
தேசிய முன்னணியுடன் இணைந்து பாஸ் கட்சி கூட்டாக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியா? பாஸ் கட்சி மறுப்பு
October 23, 2026, 3:11 pm
ரமணன் மீது அவதூறு வழக்குத் தொடுக்கிறார் ரஃபிஸி
October 23, 2026, 11:27 am
