செய்திகள் மலேசியா
தலைநகரில் குப்பைக் கிடங்கில் ஒரு குழந்தை சடலமாகவும், அடுக்குமாடி குடியிருப்பில் பெட்டிக்குள் மற்றொரு குழந்தை ஆரோக்கியமாகவும் கண்டெடுக்கப்பட்டன
கோலாலம்பூர்:
கோலாலம்பூரின் பங்சார் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கு ஒன்றில், சுமார் ஏழு மாதக் குழந்தை என மதிப்பிடப்பட்ட பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலை 10.45 மணியளவில் குப்பைத் தொட்டி ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பிரிக்ஃபீல்ட்ஸ் போலிஸ் தலைவர் ஹூ சாங் ஹுக் தெரிவித்தார்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் 318ஆவது பிரிவின் கீழ் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கெப்போங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் படிக்கட்டுகளுக்கு அடியில், பெட்டிக்குள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தை குறித்து கோம்பாக் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோம்பாக் போலிஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசின் கூறுகையில், அமான் புரி வில்லேஜ் அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது குறித்து 35 வயது நபர் ஒருவர் போலிசாருக்கு தகவல் தெரிவித்ததாகத் தெரிவித்தார்.
குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மேல் சிகிச்சை, கண்காணிப்புக்காகக் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 10:52 pm
குழந்தைகள், இளைஞர்களிடையே உள்ள மனநலப் பிரச்சினைகள் கவலையளிக்கிறது: அரசியார்
October 23, 2026, 10:05 pm
இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதில் மலேசிய நிறுவனம் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
October 23, 2026, 3:44 pm
சரவாக் மாநில சட்டமன்றம் அக்டோபர் 26ஆம் தேதி கலைக்கப்படும்: அபாங் ஜொஹாரி அறிவிப்பு
October 23, 2026, 3:23 pm
WAZE செயலியைத் தடை செய்ய அரசாங்கம் பரிசீலனை: பிரதமர் அன்வார்
October 23, 2026, 3:15 pm
மலாக்கா மாநில தேர்தல்: நம்பிக்கை கூட்டணி குறைந்தது 18 இடங்களில் போட்டியிடும்
October 23, 2026, 3:12 pm
தேசிய முன்னணியுடன் இணைந்து பாஸ் கட்சி கூட்டாக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியா? பாஸ் கட்சி மறுப்பு
October 23, 2026, 3:11 pm
ரமணன் மீது அவதூறு வழக்குத் தொடுக்கிறார் ரஃபிஸி
October 23, 2026, 11:27 am
