செய்திகள் மலேசியா
குற்றச் செயல்களுக்காக ஆலயங்களை தவறாகப் பயன்படுத்தப்படுவதை மலேசியா இந்து தர்ம மாமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது
கோலாலம்பூர்:
கிள்ளானில் பதிவு செய்யப்படாத ஆலயத்தில் இருந்த கிடங்கை சட்டவிரோத போதைப் பொருட்களைச் சேமித்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மலேசியா இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ரிஷிகுமார் வடிவேலு தெரிவித்தார்.
அந்த இடத்தில் 16.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியானது.
இந்த தகவலைத் தொடர்ந்து, வழிபாட்டுத் தலங்கள் குற்றச் செயல்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதை மாமன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் இறைவழிபாடு, பிரார்த்தனை, ஆன்மிக நெறிகளைப் பின்பற்றுதல், சமூக ஒற்றுமையை வளர்த்தல் ஆகியவற்றுக்கான புனிதமான இடங்களாகும். அவை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக ஒருபோதும் பயன்படுத்தப்படக் கூடாது என மாமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஆலயங்களின் நிர்வாகம், செயல்பாடுகள் தொடர்பான சட்ட விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று மாமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆலய நிர்வாகக் குழுக்கள், சம்பந்தப்பட்ட அமைப்புகள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
வழிபாட்டுத் தலங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனிநபர்களின் தவறான செயல்களால் ஒட்டுமொத்த சமயச் சமூகத்திற்கும் களங்கம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
சமயத்தின் புனிதத்தன்மையையும் சமூகத்தின் நம்பிக்கையையும் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 10:52 pm
குழந்தைகள், இளைஞர்களிடையே உள்ள மனநலப் பிரச்சினைகள் கவலையளிக்கிறது: அரசியார்
October 23, 2026, 10:05 pm
இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதில் மலேசிய நிறுவனம் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
October 23, 2026, 3:44 pm
சரவாக் மாநில சட்டமன்றம் அக்டோபர் 26ஆம் தேதி கலைக்கப்படும்: அபாங் ஜொஹாரி அறிவிப்பு
October 23, 2026, 3:23 pm
WAZE செயலியைத் தடை செய்ய அரசாங்கம் பரிசீலனை: பிரதமர் அன்வார்
October 23, 2026, 3:15 pm
மலாக்கா மாநில தேர்தல்: நம்பிக்கை கூட்டணி குறைந்தது 18 இடங்களில் போட்டியிடும்
October 23, 2026, 3:12 pm
தேசிய முன்னணியுடன் இணைந்து பாஸ் கட்சி கூட்டாக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியா? பாஸ் கட்சி மறுப்பு
October 23, 2026, 3:11 pm
ரமணன் மீது அவதூறு வழக்குத் தொடுக்கிறார் ரஃபிஸி
October 23, 2026, 11:27 am
