செய்திகள் மலேசியா
டத்தோஶ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் ஊழல் வழக்கை மீண்டும் பரிசீலனை செய்க: DAP இளைஞரணி AGC தரப்பிடம் கோரிக்கை
கோலாலம்பூர்:
துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடியை உட்படுத்திய யாயாசான் அகால் புடி ஊழல் வழக்கை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று DAP இளைஞரணி AGC தரப்பை கேட்டுக் கொண்டது
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு விடுதல்லை வழங்கி பின்னர் தொடர் நடவடிக்கை இல்லை என்று வகைப்படுத்தப்பட்டது.
டத்தோஶ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடியை உட்படுத்திய இந்த நடவடிக்கை நாட்டு மக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக DAP இளைஞரணி பிரிவு சுட்டிக்காட்டியது
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் அவருக்கு விலக்கு அளிக்கப்பட கூடாது. மாறாக, சட்டத்தின் முன் அனைவரும் சமம் தான் என்பதை DAP இளைஞரணி ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு 47 ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டுகளில் இருந்து துணைப்பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
எம்.ஏ.சி.சியின் விசாரணை காரணமாகவே அவருக்கு தற்காலிக விடுவிப்பு வழங்கப்பட்டதாக AGC தரப்பு விளக்கம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2026, 1:01 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: பாஸ், தேசிய முன்னணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன
September 4, 2026, 12:38 pm
மலேசியாவில், ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு அரசியல் ஆயுதமாக மாறிவிட்டது: ஹாடி அவாங்
September 4, 2026, 12:37 pm
மலாய் கட்சிகளின் ஒருமித்த கருத்து தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும்: அஷ்ராப்
September 4, 2026, 12:37 pm
துப்பாக்கிச் சூட்டில் மெக்கானிக் காயம்
September 4, 2026, 12:36 pm
இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்திய விமானி சம்பந்தப்பட்ட வழக்கில் 6 பேரை போலிஸ் கைது செய்தது: டத்தோ ஹுசைன்
September 4, 2026, 12:11 pm
வேலையாள் பிரச்சினை தொடர்பாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனிடம் பிரஸ்மா தலைவர் கோரிக்கை
September 4, 2026, 11:59 am
சரவாக் மாநிலத்தின் செரியானில் காற்றின் தரம் 510ஆக பதிவு செய்யப்பட்டு அவசர நிலையைத் தாண்டியது
September 4, 2026, 11:10 am
