நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில், ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு அரசியல் ஆயுதமாக மாறிவிட்டது: ஹாடி அவாங்

கோத்தாபாரு:

ஊழலுக்கு எதிரான தனது முயற்சிகளில் அரசாங்கம் பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாஸ் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் குற்றம் சாட்டினார்.

 கோத்தா பாருவில் உள்ள மத்திய பாஸ் முக்தமாரில் தனது சிறப்புரையை ஆற்றியபோது, ​​

மலேசியாவில் ஊழல் பிரச்சினை தனது அரசியல் எதிரிகளைக் களங்கப்படுத்தப் பயன்படுத்தப்படுவதாகவும், அதே நேரத்தில் அதிகாரிகளின் கூட்டாளிகள் நீதியின் கோரிக்கைகளிலிருந்து தப்பித்து வருவதாகவும் அப்துல் ஹாடி கூறினார்.

துரதிர்ஷ்டவசமாக மலேசியாவில், ஊழல் பிரச்சினை தடுக்கப்பட வேண்டிய ஒரு தீமையாகக் கருதப்படாமல், எதிரிகளை வீழ்த்துவதற்கான ஒரு அரசியல் ஆதாயமாகப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

எதிரிகளுக்கு எதிராக பாரபட்சமாக நடவடிக்கை எடுக்கப்படும்போதும், அதே நேரத்தில் லஞ்சம் பெறுபவர்கள், லஞ்சம் கொடுப்பவர்கள் அல்லது ஊழல் பேரங்களை ஏற்பாடு செய்யும் இடைத்தரகர்கள் என ஒருவரின் சொந்த வட்டாரத்திற்குள் நடக்கும் முறைகேடுகள் அனுமதிக்கப்படும்போதும் இந்த நிலை ஏற்படுகிறது என்று மராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர்  கூறினார்.

டான்ஶ்ரீ அப்துல் ஹாடி எந்தவொரு தனிநபரின் பெயரையும் குறிப்பிடவில்லை.

மாறாக தாபோங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தை, அதனுடன் தொடர்புடைய கட்சிகள் மீதான பொதுமக்களின் கருத்தை மாற்றுவதற்காக தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினைக்கு உதாரணமாக சுட்டிக்காட்டினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset