செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தல்: பாஸ், தேசிய முன்னணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன
கோத்தாபாரு:
மலாக்கா மாநிலத் தேர்தலில் ஒத்துழைப்பதற்காக, பாஸ் கட்சி தேசிய முன்னணியுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
ஆனால் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறினார்.
பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், தற்போதைய நிலவரங்கள், முன்னேற்றங்களைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நான் சொல்லக்கூடியது என்னவென்றால், பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. ஆனால் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
மாநில சட்டமன்றம் இன்னும் கலைக்கப்படாததால், இந்த விவகாரம் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.
தற்போதைய நிலவரத்தைப் பொறுத்து நிலைமையைப் பார்ப்போம் என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற 72ஆவது பாஸ் ஆண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மலாக்கா மாநிலத் தேர்தலில் பாஸ் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்று கேட்டபோது, அந்த விஷயம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அப்துல் ஹாடி கூறினார்.
மலாக்கா மாநில சட்டமன்றமும் இன்னும் கலைக்கப்படவில்லை. மலக்காவின் செயல்பாடு மற்றும் நிர்வாக அமைப்புகளையும், மற்ற கட்சிகளுடனான நமது ஒத்துழைப்பின் வெளிப்படைத்தன்மையையும் நாம் கவனிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2026, 12:38 pm
மலேசியாவில், ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு அரசியல் ஆயுதமாக மாறிவிட்டது: ஹாடி அவாங்
September 4, 2026, 12:37 pm
மலாய் கட்சிகளின் ஒருமித்த கருத்து தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும்: அஷ்ராப்
September 4, 2026, 12:37 pm
துப்பாக்கிச் சூட்டில் மெக்கானிக் காயம்
September 4, 2026, 12:36 pm
இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்திய விமானி சம்பந்தப்பட்ட வழக்கில் 6 பேரை போலிஸ் கைது செய்தது: டத்தோ ஹுசைன்
September 4, 2026, 12:11 pm
வேலையாள் பிரச்சினை தொடர்பாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனிடம் பிரஸ்மா தலைவர் கோரிக்கை
September 4, 2026, 11:59 am
சரவாக் மாநிலத்தின் செரியானில் காற்றின் தரம் 510ஆக பதிவு செய்யப்பட்டு அவசர நிலையைத் தாண்டியது
September 4, 2026, 11:10 am
