நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப் மகனுக்கு எதிரான திவால் நடவடிக்கைகளுக்குத் தடை; மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: டத்தோஶ்ரீ தனேந்திரன்

புத்ராஜெயா:

டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட வருமான வரி வாரியத்தின் மேல்முறையீட்டில், மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஒருமனதாக வழங்கிய தீர்ப்பு, நீதி,  அடிப்படை நியாயத்தின் கொள்கைக்காக ஒரு மைல்கல் தீர்ப்பாகும்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை கூறினார்.

முதலில் பணத்தை செலுத்து, பிறகு பேசு என்ற கொள்கையை, மக்கள் அல்லது வரி செலுத்துவோர் மீது அழுத்தம் கொடுக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தக்கூடாது.

எந்தவொரு அதிகார அமைப்பும் நியாயம், சட்டத்தின் உரிய நடைமுறை ஆகிய கொள்கைகளை மீற முடியாது.

இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு, குற்றவியல் வழக்குகளுடன் தொடர்புடைய பணத்தைக் கையாள்வது குறித்தும், அதே தொகைக்கு மீண்டும் வரி விதிக்க முடியுமா என்பது உட்பட, அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது.

இந்த ஒருமனதான தீர்ப்புக்காக கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளுக்கு வாழ்த்துகள்.

வரி விதிப்பு அதிகாரத்தின் தவறான பயன்பாட்டிலிருந்து மலேசியர்களைப் பாதுகாப்பதிலும், சட்ட அமலாக்கத்தின் பெயரில் நீதி புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கியமான தீர்ப்பாக அமையக்கூடும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset