நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துப்பாக்கிச் சூட்டில் மெக்கானிக் காயம்

புக்கிட் மெர்தாஜாம்:

பழைய வாகனப் பட்டறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  மெக்கானிக்கின் வலது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது.

இந்த மச்சாங் புபோக்கில் உள்ள ஜாலான் சுங்கை லெம்புவில், சீன மயானத்திற்கு அருகில் நேற்று மதியம் 1.05 மணிக்கு நடந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆண் சந்தேக நபர்களில் ஒருவர் 43 வயதான பாதிக்கப்பட்டவரைச் சுட்டதாகவும் மத்திய செபராங் பிறை போலிஸ்  நிலையத் தலைவர் நிக் அமினுதீன் ராஜா அப்துல்லா கூறினார்.

காயமடைந்தவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள சீன மயானத்திற்குத் தப்பிச் சென்றார். அதே நேரத்தில் இரண்டு சந்தேக நபர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவருக்கு வெட்டுக்காயங்களும், உள்ளங்கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது நிலை சீராக உள்ளதாகவும் நிக் அமினுதீன் கூறினார்.

சம்பவ இடத்திலிருந்த ஆய்வில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், சந்தேக நபரையும் சம்பவத்திற்கான நோக்கத்தையும் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கு, கொலை முயற்சி குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset