செய்திகள் மலேசியா
RM1.7 பில்லியன் வரி வழக்கில் நஜிப், அவரது மகனுக்கு திவால் நடவடிக்கைக்குத் தடை விதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
புத்ரா ஜெயா:
புத்ராஜயாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், அவரது மகன் டத்தோ முஹம்மது நஜிபுதீன் (Datuk Mohd Nazifuddin Mohd Najib) ஆகியோருக்கு திவால் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு, முந்தைய உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்கிறது. மேலும், வருமான வரி சிறப்பு ஆணையர்களிடம் (SCIT) உள்நாட்டு வருவாய் வாரியம் (IRB) விதித்துள்ள கூடுதல் வரி மதிப்பீடுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறது.
வருமான வரி வாரியம், இருவரிடமிருந்தும் கணிசமான வரி நிலுவைத் தொகையை வசூலிக்க முயன்று வருகிறது. இதில் நஜிப்பிடம் இருந்து RM1.69 பில்லியனும், நஜிபுதீனிடம் இருந்து RM37.6 மில்லியனும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2026, 1:01 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: பாஸ், தேசிய முன்னணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன
September 4, 2026, 12:38 pm
மலேசியாவில், ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு அரசியல் ஆயுதமாக மாறிவிட்டது: ஹாடி அவாங்
September 4, 2026, 12:37 pm
மலாய் கட்சிகளின் ஒருமித்த கருத்து தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும்: அஷ்ராப்
September 4, 2026, 12:37 pm
துப்பாக்கிச் சூட்டில் மெக்கானிக் காயம்
September 4, 2026, 12:36 pm
இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்திய விமானி சம்பந்தப்பட்ட வழக்கில் 6 பேரை போலிஸ் கைது செய்தது: டத்தோ ஹுசைன்
September 4, 2026, 12:11 pm
வேலையாள் பிரச்சினை தொடர்பாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனிடம் பிரஸ்மா தலைவர் கோரிக்கை
September 4, 2026, 11:59 am
சரவாக் மாநிலத்தின் செரியானில் காற்றின் தரம் 510ஆக பதிவு செய்யப்பட்டு அவசர நிலையைத் தாண்டியது
September 4, 2026, 11:10 am
