செய்திகள் மலேசியா
வேலையாள் பிரச்சினை தொடர்பாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனிடம் பிரஸ்மா தலைவர் கோரிக்கை
புத்ரா ஜெயா:
இந்திய சமூகத் தலைவர்களுடனான பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன அடிப்படையிலான பாகுபாடு, வறுமை ஒழிப்பு, கல்வி உதவி, அரசின் நிதித் திட்டங்கள், தொழில் துறை குறித்து விரிவாகப் பேசினார்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனிடம் உணவக ஆள்கள் தொடர்பான விளக்கமான அறிக்கையை டத்தோ மொஹ்சின் வழங்கினார். மேலும் உணவகத்திற்கு தேவைப்படும் ஆட்களுக்கு பதிலா 2, 3 பேர் மட்டும் வழங்கப்படுகிறது. அதுவும் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. பெரும் போராட்டத்திற்கு பிறகே உணவகங்களை மிகவும் சிரமத்துடன் நடத்தி வருவதாக அவர் விளக்கினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட மலேசிய உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டத்தோ முஹம்மது மொஹ்சின் உணவகங்கள் எதிர்கொண்டு வரும் வேலையாட்கள் பிரச்சினைகள் குறித்து விவரித்தார்.
பிரதமருடனான ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் ஃபஹ்மி ஃபாசிலும் பிரதமர் துறை அமைச்சின் அதிகாரிகளும் தலைமைச்செயலாளர் கலந்துகொண்டார்கள்.
பிரஸ்மாவின் செயற்குழு உறுப்பினர் டத்தோ செய்யத் அபு தாஹிரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2026, 1:01 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: பாஸ், தேசிய முன்னணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன
September 4, 2026, 12:38 pm
மலேசியாவில், ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு அரசியல் ஆயுதமாக மாறிவிட்டது: ஹாடி அவாங்
September 4, 2026, 12:37 pm
மலாய் கட்சிகளின் ஒருமித்த கருத்து தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும்: அஷ்ராப்
September 4, 2026, 12:37 pm
துப்பாக்கிச் சூட்டில் மெக்கானிக் காயம்
September 4, 2026, 12:36 pm
இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்திய விமானி சம்பந்தப்பட்ட வழக்கில் 6 பேரை போலிஸ் கைது செய்தது: டத்தோ ஹுசைன்
September 4, 2026, 11:59 am
சரவாக் மாநிலத்தின் செரியானில் காற்றின் தரம் 510ஆக பதிவு செய்யப்பட்டு அவசர நிலையைத் தாண்டியது
September 4, 2026, 11:10 am
